பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், தேர்தல் ஆணையம் அரசியலமைப்பைச் சார்ந்த அமைப்பு என்றும், எனவே நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் யார் பதிலளிப்பார் எனவும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸின் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையத்தின் முன்வைக்க வேண்டும் எனக்கூறிய கிரண் ரஜிஜு, தேர்தல் ஆணையம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.