தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்த பிரதமருக்குபாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நன்றி கூறியுள்ளார்,
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகம் மீது எப்போதும் பற்றும், நம்பிக்கையும் வைத்திருப்பவர் பிரதமர் என தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்காதது வருத்தம் அளிப்பதாகவும், “ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் என்றும், விஜய் இதுவரை மக்கள் பணியாற்றியதாக பதிவுகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
தவெக மாநாடு வெற்றி பெற விஜய்யை வாழ்த்துகிறேன் எனறும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.