ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் இணைந்து ராணுவ அதிகாரி ஒருவர் கிரிக்கெட் விளையாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள வயல்வெளிகளில் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ராணுவ அதிகாரி ஒருவர் அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார். பொதுமக்களுடன் நல்லுறவையும் நட்புறவையும் வளர்க்க இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக இந்திய ராணுவத்தைப் நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.