சென்னை பல்லவன் இல்லம் அருகே 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
சென்னை பல்லவன் இல்லம் அருகே எம் டி சி தலைமையகம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கம் மற்றும் சிஐடியு தொழற்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் 15வது ஊதிய ஒப்பந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வு கால பணி பலனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
முதல் நாள் போராட்டத்தை காவல்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் கைவிட்டு சென்ற போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த போலீசார், இந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி போக்குவரத்து தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
மேலும், போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களை கைது செய்வதற்காக பல்லவன் இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.