திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திமுகவினர் புகாரளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சலங்காபாளையம் திமுக பேரூர் செயலாளராகப் பழனிச்சாமி என்பவர் பதவி வகித்து வருகிறார்.
இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வார்டு செயலாளர்களான தனசேகரன், கோபால், ராஜா ஆகியோர் திமுக தலைமைக்குப் புகார் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, மூன்று பேரின் வீடுகளுக்கும் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மூன்று பேரும், பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்