சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே ஐடிஐ மாணவனை மிரட்டி வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துச் சென்ற நபரைப் பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தட்டான்சாவடியை சேர்ந்த ஐடிஐ மாணவர் ஒருவர் ஓமலூர் சாலை வழியாகத் தினமும் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். இதனை நோட்டமிட்ட 2 நபர்கள் மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனியாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மாணவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வைத்த அந்த நபர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தினமும் மிரட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவன் நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவனை வழக்கம் போல அனுப்பி வைத்து பின் தொடர்ந்து சென்றனர். அப்போது மாணவனிடம் மிரட்டலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த அந்த நபர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர்.
இதனைச் சுதாரித்துக்கொண்டு ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்றொரு நபர் பிடிபட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.