கரூரில் போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்.
சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் அளித்த இந்த மனுவில் திருமூர்த்தி, சுப்பையா, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவமயம் என்ற போலி சாமியரை வைத்துள்ளதாகவும், இவர்கள் ஒரு லட்ச ரூபாய் வழங்கினால் 3 லட்ச ரூபாயாக மாற்றித் தரப்படும் எனக்கூறி மக்களிடம் மோசடி செய்துள்ளதகாவும் குறிப்பிட்டு இருந்தார்.
எனவே மோசடியில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைவேல் என்பவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.