டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
டெல்லியில் ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தங்கம் தென்னரசு மற்றும் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது நிர்மலா சீதாராமனிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய கோரிக்கை மனுவை அவர்கள் வழங்கினர்.