மதுரை, நத்தம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு சமூக நீதி நூலகம் எனப் பெயர் மாற்றக் கோரி கள்ளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் அரசு மாணவ, மாணவிகள் விடுதிகளுக்கு சமூக நீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்குக் கள்ளர் சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நூலகத்திற்குக் கலைஞர் என பெயரிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதற்குச் சமூகநீதி எனப் பெயர் மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அனுமதியின்றி போராடியதால் போலீசார் அவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.