உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தபோது, உக்ரைனின் டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார்.
அண்மையில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு நிகழ்ந்த நேரத்தில் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் FAB-500 குண்டுகளை வீசி, உக்ரைனின் ராணுவ நிலைகளை ரஷ்ய ராணுவம் தாக்கி அழித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட ரஷ்யாவின் மிக்-31 ஜெட் விமானங்கள் கீவ் பகுதியில் பறந்ததால் சைரன்கள் ஒலிக்கப்பட்டன.