தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனும் தகவல் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பொதுச் சுகாதாரத்துறையின் பிறப்பு – இறப்பு பதிவு இணையதளத்தில் உள்ள புள்ளி விவரங்களின் படி, கடந்த 2018-ல் தமிழகத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 45 ஆயிரத்து 255 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 2024-ம் ஆண்டில் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 95 ஆயிரத்து 680 எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் வலுவாக இருந்தும், 2018-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ல் கூடுதலாக ஒன்றரை லட்சம் பேர் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.