கன்னியாகுமரியில் சட்டவிரோதமாகலோடு ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட, ராட்சத யானை திருக்கை மற்றும் முண்டக்கண் பெல்ட் சுறா மீன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேங்காய் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து வனப்பாதுகாப்பு சட்டத்தை மீறி, தடைசெய்யப்பட்ட மீன்கள் கடத்தி செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் வனத்துறையினர் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட மீன்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து லோடு ஆட்டோவை ஓட்டிச் சென்ற இருவரைப் பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.