செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு வருகை தந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த தற்காப்பு கலைஞர்கள், சிலம்பம் மூலம் மேற்கொள்ளும் தற்காப்பு யுக்திகளைச் செய்துகாட்டி அசத்தினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த டிம்ஜார்ஜன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த டெல் அம்பி ஆகியோர் இந்தியாவிலிருந்து முறையாகச் சிலம்பக் கலையை கற்று, அவரவர் நாடுகளில் அதனைப் பயிற்றுவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் வருகை தந்த அவர்களுக்கு மல்லை தமிழ் சங்கம் சார்பில் போதி தர்மர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.