அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோவில் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.
தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அதைத் தொடர்ந்து இந்தியா – ரஷ்யா இடையிலான எரிசக்தி உறவுகள் குறித்தும், அந்நாட்டு அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் விவாதிக்க உள்ளார்.
இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.