குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிபிஆரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதவில், டெல்லியில் இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். இது ஒரு பெருமையான தருணம், அவருக்கு வெற்றி மற்றும் புதிய பயணம் அமைய வாழ்த்தினேன். அவரது அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை பலருக்கு உத்வேகம் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், தமிழ் மொழியும் மக்களும் தேசிய அளவில் முன்னெப்போதும் இல்லாத அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். இந்த அங்கீகாரம் நமது தேசத்தை வரையறுக்கும் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் உணர்வைக் குறிக்கும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.