அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையரில் மெத்வதேவ் இணை அதிர்ச்சி தோல்வியடைந்தது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரிவா இணை, பிரிட்டனின் ஜாக் டிராபர்-அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா இணையுடன் மோதியது.இதில் சிறப்பாக ஆடிய ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா இணை 4-1, 4-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.