குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குடியரசுத் துணை தலைவரை தேர்வு செய்வதான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இண்டி கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று தனது வேட்பு மனுவை மேல்சபை செயலாளர் பி.சி.மோடியிடம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இண்டி கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி, சரத்பவார், திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.