தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக வெளிமாநிலங்களில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாடநூல்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள், தாய்மொழி கற்பதற்காக அங்கு செயல்படும் தமிழ் அமைப்புகளின் மூலம் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
அப்பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் தமிழ் பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நிதி நெருக்கடியை காரணம் காட்டி நடப்பாண்டு முதல் விலையில்லா பாடநூல்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதனால், வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தாய்மொழியை கற்க முடியாத அபாய நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
அதன் எதிரொலியாக வெளிமாநிலங்கலில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடநூல்களை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.