உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கை நடத்திய அண்ணன் சிபிஆர் , தமது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உடனிருந்து, சிபிஆர் அவர்களுடன் அமர்ந்து வேட்புமனுவை தாக்கல் செய்த கண்கொள்ளாக் காட்சி, கட்சி தொண்டர்களுக்கும் மிகப்பெரும் வெகுமதி என தெரிவித்தார்.
சாதாரண கட்சி தொண்டர்கள் கூட குடியரசுத் துணை தலைவராக உயர முடியும் என்பதை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் நிரூபித்துள்ளது. தமிழ் மொழி தமிழர்களின் பற்று தமிழர்களின் உரிமை என குறை கூறும் கட்சிகள், உண்மையில் தமிழரின் நலனில் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு ஆதரவு தர மறுத்ததே திமுக இதற்குச் சாட்சி என்றும் அவர் கூறினார்.
சமூக நீதிக்கான போராளிகளின் கனவுகளை மதிக்காமல், வரலாற்று பிழைகள் செய்துள்ளது திமுக. இதை மன்னிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.