அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் விஜய்-க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக யாரிடம் இருக்கிறது என்று கேட்பது அறியாமை என தெரிவித்தார்.
ஒரு கட்சி யாரிடம் இருக்கிறது என்பது தெரியாத ஒரு தலைவர் இருப்பதாகவும், அவரை தொண்டர்கள் எப்படி நம்புவார்கள்? என்றும், நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், இஷ்டத்திற்கு பேசுவதாகவும் விமர்சித்தார்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக என்றும், அண்ணா, எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அண்ணாவும், எம்.ஜி.ஆரும் மக்களுக்காக உழைத்தவர்கள் என்றும் இபிஎஸ் கூறினார்.