சென்னையில் சில மணி நேரம் பெய்த மழைக்கே பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை மழை கொட்டி தீர்த்தது.
இதனால், பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பள்ளி சாலை, டேங்க் பங்க் ரோடு, சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் பள்ளி மாணவர்களும், பணிக்கு செல்வோரும் அவதிக்கு உள்ளாகினர்.