எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டியது பாஜகவின் கடமை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவதில் பூத் பொறுப்பாளர்களுக்கு முழு பங்கு உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு ஒவ்வொரு பூத் பொறுப்பாளர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றும், அடுத்த 8 மாதம் கடுமையாக உழைத்து NDA கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டியது பாஜகவின் கடமை என்றும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் பயம் என்றும் அண்ணாமலை கூறினார்.