சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
வானிலை மைய அறிவிப்பின்படி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியும், மின் கம்பங்கள் சாய்ந்தும் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் – பூந்தமல்லி செல்லும் பிரதான சாலையில் மழைநீர் தேங்கியது. கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடையும் நிலை ஏற்பட்டது.
தேங்கிய மழைநீர் துர்நாற்றத்துடன் காணப்படுவதால் நோய்த்தொற்ற ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.