இந்தியாவுக்கு எதிராக சதி செய்து வரும் காலிஸ்தான்களுடன் ராகுல் காந்தி இணைந்து செயல்படுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற முடியாததால் காங்கிரசும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தையும் நிறுவனங்களையும் தாக்கத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
அவதூறு பரப்புரை மூலம் தேர்தல் ஆணையத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இடதுசாரி மனநிலையுடன் செயல்படும் ராகுல் காந்தி, ஆபத்தான பாதையில் செல்வதாக தெரிவித்தார்.
கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல இடதுசாரி அமைப்புகளுடன இணைந்து நாட்டிற்கு எதிராக ராகுல் காந்தி சதி செய்வதாக குற்றம்சாட்டிய அவர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் செயல்படும் நாட்டை யாராலும் சீர்குலைக்க முடியாது என தெரிவித்தார்.