மசினகுடி பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் வயது முதிர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் புலி ஒன்று சுற்றித் திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, 24 மணி நேரமும் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரியும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிக்கல் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.