வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழைப்பொழிவானது வரும் 30ம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும், இதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.