ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல் கதுவா மாவட்டத்திலும் தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாகர் காட் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பா, கதுவா சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லோகேட் மோர் அருகே உள்ள ஆற்றுப் பாலமும் சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைது வருகின்றனர்.