சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!
Aug 25, 2025, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்குவதற்கான பாராசூட் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இஸ்ரோ. அடுத்தகட்டமாகக் ககன்யான் சோதனைப் பணி டிசம்பரில் தொடங்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதுகுறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகள் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அந்த வரிசையில் விரைவில் இணையப் போகிறது இந்தியா…. இஸ்ரோவின் கனவு திட்டமான ககன்யான் இந்திய விண்வெளித் துறையின் சாதனைகளுக்கு மகுடம் சூடப்போகிறது.

10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ககன்யான் விண்கலம், விண்வெளித்துறையில் தன்னிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கியுள்ளது. கடந்த 2023ம் அக்டோபரில் ககன்யான் திட்டத்திற்கான மாதிரி விண்கலம் TV-D1, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் செலுத்தி முதற்கட்ட வெற்றியை ஈட்டியிருந்தது.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இஸ்ரோ, IADT-01 எனப்படும் Integrated Air Drop Test என்ற சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்திய விமானப்படை, கடற்படை, இந்திய கடலோர காவல்படையினர் இஸ்ரோவுடன் இணைந்து இந்தச் சோதனை முயற்சியை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாராசூட் அடிப்படையிலான வேகக் குறைப்பு அமைப்பு, ககன்யான் விண்கலம் போன்ற அமைப்பைப் பத்திரமாகத் தரையிறக்கியது.

இந்தப் பாராசூட் அமைப்பு, விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டல மேலடுக்கிற்குள் நுழையும் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கவும், சேதாரம் இல்லாமல் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரோ மேற்கொண்ட இந்தச் சோதனை வெற்றி பெற்றிருப்பதன் மூலம், விண்வெளிக்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர்களை பத்திரமாகத் தரையிறக்க முடியும். ககன்யான் திட்டத்துக்கான சோதனை, 2014ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், மூன்று பேர் கொண்ட இந்திய விண்வெளி வீரர்கள் குழு, பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் மேல் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், மூன்று நாள் ஆய்வுக்குப் பின்னர் பத்திரமாகப் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்கலத்தில் பயணம் செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரசாந்த் பால கிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா ஆகியோர் ரஷ்யாவில் 2020 பிப்ரவரி முதல் 2021 மார்ச் வரை விண்வெளிப் பயணம் தொடர்பான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருந்தனர்.

அண்மையில் ஆக்சியம்-4 மிஷனில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் சென்று திரும்பியது ககன்யான் திட்டத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

இந்த நிலையில், ககன்யான் திட்டத்தில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்குவதற்கான பாராசூட் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ள இஸ்ரோ, டிசம்பரில் ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான பணியைத் தொடங்கும், முன்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

Tags: ISROஇஸ்ரோisro news todayISRO has achieved: Gaganyaan parachute test successfulககன்யான் பாராசூட் சோதனை வெற்றிககன்யான்
ShareTweetSendShare
Previous Post

16வது ஆசிய துப்பாக்கிச் சுடும் போட்டி – பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

Related News

அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தம் : இந்திய அஞ்சல் துறை!

தெலங்கானா : பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து!

கர்நாடகா : பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட பூசாரிக்கு அடி, உதை!

இமாச்சல் : கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு!

தெலங்கானா : 5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது!

ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் ரத்து – பிசிசிஐ

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

வால்பாறை : முதியவரின் உயிர் காக்க 8 கி.மீ தொட்டிலில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்!

மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி : எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்!

கும்பகோணத்தில் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்!

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

செப்டம்பர் 5 முதல் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்!

பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies