ஒடிசாவில் ரீல்ஸ் வீடியோ எடுக்கச் சென்ற யூடியூபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த யூடியூபர் சாஹர் தனது நண்பர்களுடன் ஜெபூரில் உள்ள டுடுமா அருவிக்குச் சென்றார். தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காகச் சாஹர் தண்ணீரில் இறங்கியுள்ளார்.
அப்போது நீர் ஓட்டம் திடீரென அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாஹர் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் தண்ணீரின் நடுவில் சிக்கிக்கொண்டார்.
தொடர்ந்து கரையில் நின்ற நண்பர்கள் அவரைக் கயிறுமூலம் காப்பாற்ற முயன்றனர். ஆனால் வெள்ளத்தின் தீவிரம் மேலும் அதிகரித்ததால் சாஹர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
தகவலறிந்து அங்குச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சாஹரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சாஹர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.