திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனப் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கோவையில் தனியார்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியவர்,
பொள்ளாச்சி அருகே பாலியல் புகாரில் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டிஉள்ளார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கற்பனையான உலகத்தில் முதலமைச்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும்மாணவிகளின் நலன் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக யோசிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.