காசாவை ஆக்கிரமிக்க அதன் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
காசா நகரத்தின் மிகவும் நெரிசலான பகுதிகளில் ஒன்றான அல் சப்ராவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தரைமட்டமாக்கியுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடுகள் முற்றிலும் இடிந்து முழுவதும் சேதமடைந்தது. தாக்குதலுக்குப் பிறகு மோசமடைந்த அந்தக் குடியிருப்புப் பகுதியின் நிலைக் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.