தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடேம் பகுதியில் வடிவமைக்கப்படும் கைவினைப் பொருட்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன.
பத்ராத்ரி கோத்தகுடேம் பகுதியில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக கைவினைப் பொருட்கள் வடிவமைப்பு விளங்குகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கைவினைப் பொருட்களை இவர்கள் தயாரித்து வருகின்றனர். மூங்கில் மற்றும் மரத்தால் செய்யப்படும் நுணுக்கமான சிலைகள், கூடைகள் மற்றும் மினியேச்சர் வீட்டுப் பொருட்கள் ஆகியவைப் பலரையும் வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
அங்கீகாரம் மற்றும் சந்தை அணுகல் இல்லாததால் ஒரு காலத்தில் மங்கிப்போன இந்தப் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் உற்பத்தி, ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதரவால் மீண்டும் புத்துயிர்ப் பெற்றுள்ளது. தொடர்ந்து இவர்களின் தயாரிப்பு பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.