இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், நாம் எப்போதும் முதலில் எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்பது உலகுக்குத் தெரியும் எனக் கூறினார்.
அதற்காக நாம் எப்போதும் பின்வாங்குவோம் என்று அர்த்தமாகாது எனத் தெரிவித்த ராஜ்நாத் சிங், நமது பாதுகாப்புக்கு எதிரிகளால் ஆபத்து வரும்போது சரியான பதிலை எப்படி அளிப்பது என்று நமக்குத் தெரியும் எனவும் குறிப்பிட்டார்.