விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூஜைப் பொருட்களின் விற்பனைக் களைகட்டியது.
இந்துக்களின் முக்கிய விழாவான விநாயகர்ச் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுகளில் பூஜைப் பொருட்களின் விற்பனைக் களைக்கட்டியது.
அந்த வகையில், சென்னைக் கோயம்பேடு சந்தையில் பூஜைப் பொருட்கள் வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் விநாயகர்ச் சிலைகள், பூக்கள், அலங்காரப் பொருட்கள், பழங்கள் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதேபோல, மதுரை மாட்டுத்தாவணியிலும் விநாயகர்ச் சதுர்த்தி விற்பனை களைக்கட்டியது. பூஜை மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
விநாயகர்ச் சதுர்த்தியை ஒட்டி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
தொடர்ந்து விநாயகர்ச் சிலை, பூஜைப் பொருட்கள், பூக்கள், பழங்கள் ஆகியவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். பொதுமக்களின் வருகையால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.