ஹைதராபாத்தில் சாலை மார்க்கமாகச் சென்ற மாநகரப் பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெகதி பட்டினம் வழியாகச் சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தின் இஞ்சினில் இருந்து திடீரெனப் புகை வெளியேறி தீப்பற்றியது.
இதனைக் கண்ட ஓட்டுநர்ப் பேருந்தை சாலையோரம் நிறுத்திய நிலையில், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தொடர்ந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை அணைத்த நிலையில், பேருந்தின் முன் பகுதி தீயில் கருகி நாசமானது.