ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுகக் கேட்பது வரவேற்கத்தக்கது என்றும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னைக் கோயம்பேடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
விநாயகர்ச் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து கூற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என்றும் பீகார் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியில்தான் பேச வேண்டும் என்று எல்.முருகன் தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் பேசினால் பீகார் மக்களுக்குப் புரியாது என்று கூறியவர்,”ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கண்ட இயக்கம்; நேரு, அம்பேத்கரே ஆர்எஸ்எஸ் பற்றிப் புகழ்ந்துள்ளனர் என்றும் ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுகக் கேட்பது வரவேற்கத்தக்கது என்று எல்.முருகன் கூறினார்.
விஜய்யும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எல். முருகன் தெரிவித்தார்.