சேலம் கருப்பூர் விவேகானந்தா கேந்திரியா வித்யாலயா பள்ளியில் விநாயகர்ச் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அப்போது 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுவாமி விநாயகரைப் போன்று அணிவகுத்து நின்றனர்.
பின்னர் சுவாமி கண்களைத் திறப்பது, தும்பிக்கையை அசைப்பது போன்று தத்ரூபமாகச் செய்து காண்பித்தனர். இதனை அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.