தென்காசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி உயர விநாயகரை நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் வழிபாடு செய்தனர்.
தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர்ச் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.
அதன்படி, தென்காசி விஸ்வநாதர்க் கோயிலுக்கு முன்பாக 12 அடி உயர விநாயகர்ச் சிலையை இந்து முன்னணியினர் வைத்துள்ளனர்.
அங்கு குவிந்த பள்ளிக் குழந்தைகள், தாங்களே உருவாக்கிய விநாயகர்ச் சிலைகளை அடுக்கி வைத்து விநாயகரை வழிபட்டனர்.