நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கண்டு களித்துச் சுவாமி தரிசனம் செய்தனர்.
சந்தைபேட்டைப் புதூரில் அமைந்துள்ள செல்வ விநாயகர்க் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது.
மேலும், செல்வ விநாயகர்க் கோயிலில் பெருமாளின் 11 அவதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விநாயகர்ச் சிலைகள் பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ளன.
கூர்ம, வாமன, இராம, நரசிம்ம, கல்கி, ரிஷப, மச்ச, பலராம, கிருஷ்ண, வராக, பரசுராம ஆகிய 11 அவதாரங்களில் விநாயகர்ச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைச் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்துச் சுவாமி தரிசனம் செய்தனர்.