அமெரிக்காவின் 50 சதவீதக் கூடுதல் வரி விதிப்பு காரணமாக மாதத்திற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர்ப் பின்னலாடை நிறுவனங்கள் கடும் சிக்கலைச் சந்தித்துள்ளதாக உரிமையாளர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் வரி விதிப்புக்கு முன் அமெரிக்காவில் 10 டாலருக்கு விற்கப்பட்ட பின்னலாடை, தற்போது 16 முதல் 18 டாலருக்கு விற்பனைச் செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை நீக்கப் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென திருப்பூர்ப் பின்னலாடை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.