சேலம் அருகே திமுகக் கோஷ்டி பூசல் காரணமாக விநாயகர் சிலையை அகற்ற போலீசார்க் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிசி பாளையம் பகுதியில் மாநகராட்சி கவுன்சிலர்ச் சபிதாவின் கணவர்ப் பிரகாஷ் மற்றும் திமுக இளைஞரணி அமைப்பாளர்த் தமிழரசன் இடையே கோஷ்டி பூசல் நிலவுகிறது.
அப்பகுதி மக்கள் பிரகாஷுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விநாயகர்ச் சதுர்த்தியை ஒட்டி பொதுமக்கள் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன், 13 அடி உயரத்திற்குச் சிலை வைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்ற கோரி காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிலையின் உயரத்தைக் குறைக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினர்.
தொடர்ந்து சிலையின் அடிப்பகுதியை வெட்டி எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஏராளமானோர் அங்கு குவிந்து, திமுகவின் கோஷ்டி பூசல் காரணமாக, விநாயகர்ச் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை என வேதனைத் தெரிவித்தனர்.