விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி சிவகங்கையில் உள்ள காந்திவீதி, நேருபஜார், அரண்மனைவாசல், பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் வியாபாரம் களைக்கட்டியது.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த களிமண் விநாயகர்ச் சிலைகள், பூக்கள், பழங்கள் உள்ளிட்டவற்றையைப் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றதாகவும் இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய்-க்கும் மேல் வர்த்தகமானதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.