ஜம்மு காஷ்மீரில் கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தினுள் கார்கள் சிக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 36 மணி நேரமாக இடைவிடாது மழைப் பெய்து வருவதால் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் ஜம்முவில் உள்ள தாவி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் மீது வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது திடீரெனப் பாலம் இடிந்து விழுந்ததில் கார்கள் இடிபாடுகளுக்குள் சிக்கின. இதனையடுத்துச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தலைமையிலானோர் ஆய்வு நடத்தினர்.