திறன் பெற்ற இந்திய பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டுக்கான இந்திய துாதர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களின் குடியேற்ற கொள்கையைக் கடுமையாக்கி வருகின்றன.
இதனால் திறன் பெற்ற இந்திய தொழிலாளர்கள் வேறு நாடுகளைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள ரஷ்யாவுக்கான இந்திய துாதர் வினய் குமார், கனரக இயந்திரங்கள் மற்றும் மின்னணு போன்ற உயர் திறன் தேவைப்படும் துறைகளில், இந்திய பணியாளர்களை வேலைக்கு எடுப்பதில் அந்நாட்டு நிறுவனங்கள் ஆர்வமுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.