ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டால் மறுநாளே, 25 சதவீத வரி தள்ளுபடியை இந்தியா பெற முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவரோ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதால், உக்ரைன் மீதான போருக்கான இயந்திரங்களை ரஷ்யா வாங்கி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
இந்தியாவின் பணத்தை ரஷ்யா போர் இயந்திரத்திற்குப் பயன்படுத்துவதால் இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதாகவும் அவர்க் கூறினார்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, போர் இயந்திரத்தைத் தோற்கடிக்க உதவினால் இந்தியா நாளையே 25 சதவீத வரி தள்ளுபடியைப் பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க வரி செலுத்துவோர் கூடுதல் செலவுகளைச் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவரோ தெரிவித்துள்ளார்.