பீகாரில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
வாக்காளர் உரிமை என்ற யாத்திரையைக் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார்.
பீகாரின் தர்பங்காவில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்தப் பேரணியில் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
இதற்காக விமானம் மூலம் பீகார்ச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் பேரணியாகச் சென்றார். இந்தப் பேரணியில் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கனிமொழி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதனிடையே, பேரணியின் நிறைவில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ராஜிவ் காந்தி என்று தவறுதலாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால், ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ Youtube சேனலில், ராஜிவ் காந்தி என்பதற்குப் பதிலாக ராகுல் காந்தி என ஸ்டாலின் பேசும் வகையில் Patch work செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.