நடப்பாண்டு விளம்பரம் மூலம் சர்வதேச டென்னிஸ் வீரர்கள் ஈட்டிய வருவாய் விவரம் வெளியாகியுள்ளது.
அதில் இரண்டாம் நிலை வீரரான அல்காரஸ் 421 கோடி ரூபாய் சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் விளம்பர ஒப்பந்தம் மூலம் மட்டும் 306 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக இத்தாலியின் ஜானிக் சின்னர் 414 கோடி ரூபாய் சம்பாதித்து 2-வது இடத்தில் இருக்கிறார்.
அமெரிக்க வீராங்கனைக் கோகோ காப் 396 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 3-வது இடத்தில் உள்ளார். வீராங்கனைகளில் கோகோ காப்பே முதலிடத்தில் உள்ளார்.
24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஜோகோவிச் 256 கோடி ரூபாயுடன் 4-வது இடத்தில் உள்ளார்.