முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றியமைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவுக்குத் தனது மனைவிக்குப் பதிலாக மகளை அழைத்துச் செல்லவும், பயண தேதியை மாற்றவும் அனுமதி கோரி அசோக்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அமெரிக்கா சென்றதும் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவிப்பதற்குப் பதில், மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிக்கவும் அனுமதி கோரினார்.
இதனை ஏற்ற நீதிபதிகள், அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகளை மாற்றியமைத்து உத்தரவிட்டனர்.
















