விநாயகர் சதுர்த்தி திருவிழாவைச் சீர்குலைக்க காவல்துறையில் உள்ள சிலர் சதிச்செயலில் ஈடுபடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் நோக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கெடுப்பதற்கு கட்டுப்பாடு என்ற பெயரில் சதி நடப்பதாகக் கூறியுள்ளார்.
சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடு என்ற பெயரில் காவல்துறை அடக்குமுறை நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு உங்கள் பகுதியில் விநாயகர் எண்ணிக்கைக் குறைந்தால் வெகுமதி கிடைக்கும் எனவும்
அதுவே எண்ணிக்கைச் சென்ற ஆண்டைவிட ஒன்று கூடினாலும் மெமோ அளிக்கப்படும் என்று வாக்கிடாக்கில் மிரட்டல் விடுத்ததும் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.
விநாயகர்ச் சதுர்த்தி திருவிழா சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிட காவல்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டுமென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியிறுத்தி உள்ளார்.