கரம்கோர்க்கும் டிராகன், கரடி, புலி : டிரம்பின் வரி - கொள்கைகளால் வலுவடையும் மும்மூர்த்திகள் கூட்டணி!
Oct 29, 2026, 05:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கரம்கோர்க்கும் டிராகன், கரடி, புலி : டிரம்பின் வரி – கொள்கைகளால் வலுவடையும் மும்மூர்த்திகள் கூட்டணி!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 09:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க அதிபர் டிரம்பின் சுங்க வரி கொள்கைகள் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா இடையே கூட்டணியை வலுப்படுத்தி, 54 டிரில்லியன் டாலர் உலகளாவிய அதிகார மையத்தை உருவாக்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம்…

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்கத் தொழில் வளங்களைப் பாதுகாக்கவும், டாலரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் கடுமையான சுங்க வரிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். ஆனால், இதன் எதிர்பாராத விளைவு, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று சக்திவாய்ந்த நாடுகளை ஒன்றிணைந்து, ஒரு புதிய உலகப் பொருளாதார சக்தி மையமாகும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த மூன்று நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 53.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது மொத்த உலக உற்பத்தியின் சுமார் மூன்றில் ஒரு பங்கு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து ஆண்டுக்கு 5.09 டிரில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது உலக வர்த்தகத்தின் ஐந்தில் ஒரு பங்கு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு, 4.7 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த நாடுகளின் மக்கள் தொகையும் 3.1 பில்லியனாக இருப்பதால், இவை உலகின் மிகப்பெரிய நுகர்வோர்ச் சந்தையாக திகழ்கின்றன. இதன் காரணமாகவே இந்த மூன்று நாடுகளும் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் உலகின் முக்கிய சக்திகளாகத் திகழ்ந்து வருகின்றன.

ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை இந்தியா மற்றும் சீனா அதன் உள்ளூர் நாணயங்களில் வாங்கி வருகின்றன. இதனால், அமெரிக்க டாலரின் சர்வதேச ஆதிக்கம் குறைந்து, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் நாணயக் கையிருப்பு மற்றும் சர்வதேச நாணயத் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்த டிரம்ப், டாலரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த புதிய சுங்க வரி கொள்கைகளைக் கையிலெடுத்தார்.

அவரின் செயல்கள் தொடக்கத்தில் டாலரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியாகத் தென்பட்டாலும், அவை இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டணியை மறைமுகமாக வலுப்படுத்தியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி பொருளாதாரத்தைத் தாண்டி, பாதுகாப்புத் துறையிலும் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக இந்த 3 நாடுகளின் பாதுகாப்புத் துறைக்கான ஆண்டு செலவு 549 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இது உலகப் பாதுகாப்புத் துறையின் செலவில் 20 சதவீதம் ஆகும். அண்மைக் காலமாக அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஆயுதங்களையும், உபகரணங்களையும் வாங்க வலியுறுத்தி வருவதும், புது டெல்லி, பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ கூட்டணி கூடுதல் வலுவடைய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த மும்மூர்த்திகளின் கூட்டணியால் வருங்காலத்தில் சீனா ஏற்றுமதி தடைகளைச் சந்திக்கும்போது, இந்தியா அதற்கு மாற்று விநியோக மையமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் சேவைத்துறை மற்றும் மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தை இந்தக் கூட்டணியின் முக்கிய சக்திக் கூறுகளாகப் பார்க்கப்படுவதால், இது சீனாவின் முக்கிய சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உத்திகளில், இந்தியாவின் நிலையை வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் ரஷ்யா–உக்ரைன் போரும், மற்றொருபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தடைகளும், உலகளாவிய வர்த்தகத்தை மறுசீரமைப்பதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், தற்போது உருவெடுத்து வரும் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா கூட்டணி, உலகின் பலதுருவ சக்தி மையமாக மாறும் அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. இதன் மூலம் வருங்கால உலக வர்த்தகம் சீனாவைத் தாண்டி இந்தியாவை முன்னிலைப்படுத்தியே இருக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: Indiaamerica50புலிகரடிThe Dragonthe Bearand the Tiger: A Triad Alliance Strengthened by Trump's Tax and Policiesகரம்கோர்க்கும் டிராகன்
Share
Tweet
SendShare
Previous Post

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

Next Post

இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் : அஜித் தோவலின் பங்கு என்ன?

Related News

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies